Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தந்தை-மகனின் கைவரிசை…. கைது செய்த போலீஸ்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!

தலைமை ஆசிரியரிடம் நகை பறித்து சென்ற 2 பேருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

சேலம் மாவட்டத்திலுள்ள அஸ்தம்பட்டி வங்கி தெருவில் ஜனத்சித்ரா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளி தலைமை ஆசிரியராக இருக்கின்றார். இவர் கடந்த 2012-ஆம் ஆண்டு மார்ச் மாதம் அஸ்தம்பட்டி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த 2 பேர் கத்தியை காட்டி ஜனத்சித்ரா கழுத்தில் கிடந்த 6 3/4 பவுன் தங்க சங்கிலியை பறித்துவிட்டு தப்பி சென்று விட்டனர்.

இதுகுறித்து ஜனத்சித்ரா கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அரியலூர் மாவட்டம் அந்தோனியார் கோவில் தெருவைச் சேர்ந்த கணேசன் மற்றும் அவரது மகன் ஜெகதீசன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். அதில் ஜனத்சித்ரா கழுத்தில் அணிந்திருந்த தாலி சங்கிலியை பறித்து சென்ற கணேசன் மற்றும் அவருடைய மகன் ஜெகதீஷ் ஆகிய 2 பேருக்கும் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி ஜெயந்தி தீர்ப்பளித்துள்ளார்.

Categories

Tech |