Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இனி உங்களுக்கு பயம் வேண்டாம்…. 24 மணி நேரமும் சேவை…. சூப்பிரண்டு தகவல்….!!!

பொதுமக்கள் காவல்துறையினரை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம் காவல்துறை சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் காவல்துறை சூப்பிரண்டாக பணிபுரிந்து வந்த சிபிசக்கரவர்த்தி சென்னை மாவட்ட சைபர் கிரைம் பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு பதிலாக சென்னையில் பணிபுரிந்து வந்த பாலகிருஷ்ணன் மாவட்ட காவல்துறை சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார். அதன்பின் மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு அலுவலகத்தில் தற்போது பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இதனையடுத்து இம்மாவட்டத்தில் கிராமப்பகுதிகள் அதிகம் இருப்பதினால் அங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு காவல்துறை என்றாலே ஒரு அச்சம் ஏற்பட்டுள்ளது.

அந்த அச்சத்தை போக்குவதற்காக காவல்துறை சார்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் மற்றும் கிராமப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் காவல்துறையினரை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். இனிமேல் காவல்துறை என்றாலே பயம் இருக்க வேண்டிய தேவை இல்லை எனவும், பொதுமக்கள் உறவினர்கள் போல காவல்துறையிடம் பழகி தங்களுடைய குறைகளை தெரிவிக்கலாம் மற்றும் புகார் கொடுத்தால் காவல்துறையினர் கனிவாகப் பேசி புகார்களை பெற்று அந்த குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என சூப்பிரண்டு தெரிவித்துள்ளார். இருப்பினும் காவல்துறையினர் தாங்கள் அளித்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் காவல்துறை சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கலாம்.

இதனை தொடர்ந்து பொதுமக்கள் தங்களது பகுதியில் நடக்கும் குற்ற சம்பவங்கள், புகார்கள் மற்றும் குறைகள் குறித்து எந்த நேரம் வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம். இதில் கஞ்சா, சாராயம், மணல் கடத்தல் ஆகியவற்றை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என சூப்பிரண்டு தெரிவித்துள்ளார். இதனைப் போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் யார் என கண்டறியப்பட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் நவீன தானியங்கி சிக்னல்கள் அமைத்து போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், சாலை விபத்துகளை குறைக்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.

Categories

Tech |