குழந்தை இல்லாத விரக்தியில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கடையக்குடி பகுதியில் நாச்சியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழரசி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு திருமணமாகி 4 வருடங்கள் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை. மேலும் கடந்த 1 வருடமாக நாச்சியப்பன்- தமிழரசி தம்பதியினர் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த தமிழரசி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தமிழரசியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.