Categories
உலக செய்திகள்

நீர்மூழ்கி ஏவுகணை சோதனை…. வெற்றியடைந்த பிரபல நாடு…. அவசர கூட்டம் அறிவிப்பு….!!

நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவுகணையை அனுப்பி தொழில்நுட்பத்தை பெற்ற உலகின் ஏழாவது நாடாக தென் கொரியா உருவெடுத்துள்ளது.

தென்கொரியா நாடு நேற்று நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவுகணை சோதனையை நடத்தியது. இந்த ஏவுகணையானது இலக்கை குறிவைத்து துல்லியமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சோதனையானது ஜனாதிபதி moon jae-in முன்னிலையில் நடைபெற்றதாக தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இந்த தொழில்நுட்பத்தை உலகிலேயே ஏழாவது நாடாக தென்கொரியா பெற்றுள்ளது என்றும் கூறியுள்ளனர். மேலும் இந்த சோதனையானது நீர்மூழ்கி கப்பலான அஹ்ன் சாங்-ஹோவில் இருந்து ஏவப்பட்டுள்ளது.

இதற்கு முன்பாக, தென் கொரியாவின் கூட்டுத் தலைமை அதிகாரிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் வடகொரியா ஏவிய 2 பாலிஸ்டிக் ஏவுகணைகளானது ஜப்பானின் பிரேத்யேக பொருளாதார மண்டலத்தை நோக்கி அனுப்பப்பட்டது. மேலும் இந்த சம்பவத்திற்கு சியோல் மற்றும் டோக்கியோ ஆகிய இரண்டு நகரங்களும் தங்களது தேசிய பாதுகாப்பு அமைப்புகளை அவசரமாக கூட்ட போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |