அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணிக்கு சொந்தமான 28 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலை அவரது உறவினர்கள் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை என்பது உள்ளாட்சித் தேர்தல் சமயத்தில் திட்டமிட்டு ஆடும் நாடகமே தவிர வேறொன்றுமில்லை. கருத்து மோதல் நமக்குள் ஏற்படலாம். அது வளர்ச்சிக்கு அறிகுறி.
நாம் மனிதர்கள். காட்டு விலங்குகள் அல்ல. காட்டு விலங்குகளின் முறையை கையாண்டால் அதற்கு பெயர் ஜனநாயகம் ஆகாது. இது பாசிச முறை என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் கூறினார். அவரின் இந்தக் கூற்றை முற்றிலும் முரணாக்கும் வகையில் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் விதமாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக திமுக அரசு முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி வீட்டில் “ஸ்டாலின் போலீசார்” சோதனை என்ற பெயரில் இன்று ஒரு கபட நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர். இது உள்ளாட்சித் தேர்தல் சமயத்தில் திட்டமிட்டு ஆடும் நாடகம் தவிர எதுவும் கிடையாது என்று பதிவிட்டுள்ளார்.