பராமரிப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஊழியர்களை தேனீக்கள் கொட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூரில் சிம்ஸ் பூங்கா அமைந்துள்ளது. இந்தப் பூங்காவில் இருக்கும் மரத்தில் தேனீக்கள் கூடு கட்டியுள்ளது. இந்நிலையில் ஊழியர்கள் வழக்கம் போல பராமரிப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது தேனீக்களின் கூடு கலைந்து விட்டது. அப்போது தேனீக்கள் கொட்டியதால் ஊழியர்கள் அலறி அடித்தபடி அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளனர்.
இதனை அடுத்து ஊழியர்கள் தீ மூட்டி புகை போட்டு அந்த தேனீக்களை அங்கிருந்து விரட்டி உள்ளனர். மேலும் காயமடைந்த ஊழியர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.