புதினா பன்னீர் கிரேவி
தேவையான பொருட்கள் :
பன்னீர் – 1 கப்
புதினா இலை – 1 கைப்பிடியளவு
கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை – சிறிதளவு
வெங்காயம் – 1
தக்காளி – 1
பச்சை மிளகாய் – 1
சர்க்கரை – 1/2 டீஸ்பூன்
எண்ணெய் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் பன்னீரை எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும் . புதினாவுடன் கொத்தமல்லி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம் , தக்காளி, சர்க்கரை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும் . கடாயில் எண்ணெயை விட்டு, அரைத்த மசாலா மற்றும் உப்பு போட்டு வதக்கி, பின்னர் பனீர் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் தெளித்து , 2 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கினால் சுவையான புதினா பன்னீர் கிரேவி தயார் !!!