Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

டார்கெட் வேண்டாம்…. அஞ்சல் ஊழியர்களின் கண்டன ஆர்ப்பாட்டம்…. புதுக்கோட்டையில் பரபரப்பு….!!

அஞ்சல்துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தலைமை அஞ்சல் நிலையத்தின் முன்பு அஞ்சல் ஊழியர்கள் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அகில  இந்திய அஞ்சல்,தேசிய தபால் ஊழியர் மற்றும் கிராமிய தபால் ஊழியர் சங்கத்தினர் கலந்துகொண்டனர். இதனையடுத்து அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவரான குமார் என்பவர் இந்த போராட்டத்திற்கு தலைமை தாங்கி பேசியுள்ளார்.

மேலும் அஞ்சல் ஊழியர்கள், அஞ்சல் ஊழியர் சங்க அலுவலர்கள், அஞ்சல்காரர்கள் என பலர் இதில் கலந்து கொண்டுள்ளனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அஞ்சல் நிலையங்களில் உள்ள எழுத்தர் பற்றாக்குறையை நீக்கிட வேண்டும் என்றும், அஞ்சல் நிலையங்களில் வாடிக்கையாளர்கள் கணக்கு தொடங்குவதற்கான இலக்கு நிர்ணயம் செய்தல் இருக்கக் கூடாது என்றும், மிரட்டல் செய்யும் அதிகாரிகள் மேல் தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும்  பல கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.

Categories

Tech |