Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

விவசாயிகளே ரெடியா இருங்க… வரும் 17 ஆம் தேதி… வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!

திருப்பூர் மாவட்டத்தில் சிறு குறு விவசாயிகளுக்கு சான்று வழங்கப்பட உள்ளதாக  தோட்டக்கலை உதவி இயக்குனர் திவ்யா விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,மத்திய மாநில அரசாங்கம் நுண்ணிர் பாசன திட்டத்திற்கு பல்வேறு விதமான மானியங்களை தொடர்ந்து  வழங்கி வருகிறது . அதுபோன்று சிறு குறு விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்ற  100% மானியமும் அதில் அடங்கும் என்று தோட்டக்கலை  உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் 5 ஏக்கருக்கும் குறைவாக உள்ள சிறு குறு விவசாயிகளுக்கு சான்று வழங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து வருகின்ற 17ஆம் தேதி துங்காவி கிராமத்தில் காலை 10.30 மணி முதல் நண்பகல் 3 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .

அதில் சிறு குறு விவசாயிகளுக்கு வருவாய் துறை மூலமாக உடனடியாக சான்று வழங்க நடவடிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சுற்றுப்புற கிராமத்தில் வசித்து வருகின்ற  சிறு குறு விவசாயிகள் சிட்டா, அடங்கல் ,பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 2, நில உரிமைச் சான்று பத்திரங்கள் ,ஆதார் மற்றும் குடும்ப அட்டை ஆகிய ஆவணங்களை சிறப்பு முகாம் நடைபெறும் இடத்திற்கு எடுத்து சென்று சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .

Categories

Tech |