Categories
மாநில செய்திகள்

அரசு ஐடிஐயில் பயிற்சி பெற வேண்டுமா…? அதுவும் உதவித்தொகையுடன்…. 18, 26-ம் தேதிகளில் நேர்காணல்…!!!

அரசு உதவித்தொகையுடன் தொழில் பழகுநர் பயிற்சியில் சேருவதற்கான நேர்காணல் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவை மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: “உலக வங்கியின் நிதி உதவி மூலமாக மத்திய மாநில அரசுகளால் நடைமுறைப்படுத்தப்படும் இந்த  திட்டத்தின் மூலம் சிறு குறு தொழில் நிறுவனங்களில் மெஷினிஸ்ட், பிட்டர், சிஎன்சி ப்ரோக்ராம் ஆபரேட்டர் போன்ற தொழில் பிரிவுகளில், தொழில் பழகுனர் பயிற்சி பெற தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இதற்கு முதலில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மூன்று அல்லது ஆறு மாதங்கள் அடிப்படை பயிற்சி மற்றும் அதனைத் தொடர்ந்து ஓராண்டு முதல் இரண்டு ஆண்டு வரை தொழில் பழகுநர் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். பயிற்சியை நிறைவு செய்த பின் மத்திய அரசால் வழங்கப்படும் இந்த சான்றிதழ்களை கொண்டு இந்தியா மற்றும் வெளிநாட்டில் பணிகளுக்கு நம்மால் செல்ல முடியும். இதற்காக வரும் 18 மற்றும் 26 தேதிகளில் கோவை கவுண்டம்பாளையம் அடுத்து உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேர்காணல் நடைபெற உள்ளது.

இந்த நேர்காணல் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். அதுமட்டுமில்லாமல் பயிற்சியின்போது உதவித்தொகையும் வழங்கப்படும். இங்கு பயிற்சி முடித்தவர்களுக்கு தனியார் நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பு பெற்று தர முயற்சி எடுக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஆதார் அட்டை, கல்வி சான்றிதழ், ஜாதி சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை 3 ஆகியவற்றுடன் நேரில் கலந்துகொள்ள வேண்டும் என்று திறன் பயிற்சி அலுவலகம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |