Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘சிஎஸ்கே அணிக்கு இருக்குற பிரச்சன இதுதான் ‘ ….! கவுதம் கம்பீர் பேச்சு ….!!!

அமீரகத்தில் நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- சிஎஸ்கே அணிகள் மோத உள்ளன.

14-வது ஐபிஎல் தொடரின்  2-வது பகுதி ஆட்டம் வருகின்ற 19-ஆம் தேதி அமீரகத்தில்  நடைபெறுகிறது. இதில் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- சிஎஸ்கே அணிகள் மோத உள்ளன. இதில் நடப்பு சீசனில்  சிஎஸ்கே அணி கோப்பையை கைப்பற்ற கடும் முயற்சியை  மேற்கொண்டு வருகிறது. அதேசமயம் சிஎஸ்கே அணிக்கு பிரச்சினை இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது,” கேப்டன் தோனி 4-வது அல்லது 5-வது இடத்தில் களமிறங்கும் பேட்ஸ்மேன் .ஆனால் நடப்பு சீசனில் 6-வது அல்லது 7-வது இடத்தில் களமிறங்குகிறார். சில சமயங்களில் சாம் கரனைக் தனக்கு முன்னால் அனுப்பி வைத்தார் .

இதனால் சிஎஸ்கே அணியை பொறுத்தவரை ஒரு  மென்டாராகவும் ,விக்கெட் கீப்பராகவும்  மட்டுமே இருக்க பார்க்கிறார் என்பதால் இப்படி செய்கிறார். இதனால் இனிமேல் பேட்டிங்  என்பது தோனிக்கு மிகப்பெரிய பிரச்சினையாக தான் இருக்கப்போகிறது .இதற்குக் காரணம் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத போது ஐபிஎல் தொடரில் விளையாடுவது கடினமானதுதான். இதனால் சிஎஸ்கே-வுக்கு இருக்கும்  மிகப்பெரிய பிரச்சனை அவர்களுடைய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நன்றாக ஆட வேண்டும் .ஏனெனில் தோனியால்  இனி பழைய மாதிரி விளையாட முடியாது” என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |