அவசரநிலைக்கான அறிவியல் ஆலோசனைக் குழு ஆலோசகர் பிரித்தானியர்கள் கொரோனா மருத்துவமனைகளில் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.
பிரித்தானிய சுகாதார செயலாளர் சஜித் ஜாவிட் கொரோனா தொற்று பாதிப்பு குளிர்காலத்தில் அதிகரிக்கும் என்பதால் கொரோனா கட்டுப்பாடுகள் மீண்டும் அமலுக்கு வர வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா சாதாரணமாக ஒழிய போவதில்லை, நீண்ட காலத்திற்கு நாம் அனைவரும் வைரஸ் பிடியில் உள்ளோம் என்று அவசர நிலைக்கான அறிவியல் ஆலோசனை குழு ஆலோசகர் Andrew Hayward கூறியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் குளிர்காலத்தில் தடுப்பூசி போட்டிருந்தாலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளார். எனவே நாம் கொரோனா தொற்றுடன் வாழக்கூடிய ஒரு சூழ்நிலையில் உள்ளோம். நாம் கொரோனா தொடர்புடைய மருத்துவமனைகளுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் Andrew Hayward கூறியுள்ளார்.