டெல்லியில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி டெல்லியில் வடக்கு, மேற்கு, வடமேற்கு, தென்மேற்கு, டெல்லி உள்ளிட்ட பல பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. டெல்லியில் 20 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இதன் காரணமாக டெல்லியின் பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். அதை தொடர்ந்து டெல்லியில் மத்திய புதுடெல்லி, தென்கிழக்கு, கிழக்கு, டெல்லி சம்பத், கண்டல் உள்ளிட்ட பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்தது.
Categories