மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தில் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள விக்கிரமசிங்கபுரம் பகுதியில் சவரிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாம்ரூபன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் திருநெல்வேலியில் உள்ள அச்சகத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் வடமலைசமுத்திரத்திலிருந்து சாம் ரூபன் மோட்டார் சைக்கிளில் விக்ரமசிங்கபுரத்திற்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் சாம்ரூபன் சங்கரபாண்டியபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது சாலையோரம் உள்ள மின் கம்பத்தின் மீது மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சாம்ரூபன் பலத்த காயமடைந்தார். இதனைப் பார்த்த அருகிலுள்ளவர்கள் சாம்ரூபனை உடனடியாக மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்க சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சாம்ரூபன் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.