என்சிசி அமைப்பினை மறுசீரமைப்பு செய்வதற்கான ஆய்வுக்குழு ஒன்றை மத்திய பாதுகாப்பு அமைச்சகம் அமைத்து உள்ளது. அதில் எம்எஸ் தோனியின் பெயர் இடம்பெற்றுள்ளது.
இந்தியாவில் 74 ஆண்டுகள் பழமையான அமைப்பான என்சிசியை தற்போது இருக்கும் நவீன சூழலுக்கு ஏற்ப வடிவமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இதில் உயர்மட்ட குழு ஒன்றை முன்னாள் எம்.பி. பைஜயந்த் பாண்டா தலைமையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைத்தது. இந்த குழுவில் இந்தியா கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி, மகேந்திர குடும்பத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா ஆகியோரை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் அமர்த்தியுள்ளது. இவர்களின் என்.சி.சி.யை மறுசீரமைப்பு செய்வதற்கான ஆலோசனைகளை கூறுவார்கள் என்று தெரிவித்துள்ளது. இந்திய ராணுவ பாராசூட் பிரிவில் ஒரு மாதம் தங்கியிருந்து பயிற்சி பெற்றதால் டோனி இந்த குழுவில் இடம் பெற்றுள்ளார்.