Categories
உலக செய்திகள்

என்ன ஒரு துணிச்சல்….? குற்றவாளியிடம் கைவரிசை…. வைரலாகும் வீடியோ காட்சி….!!

போலீசார் கைது செய்து கொண்டிருந்த குற்றவாளியிடம் இருந்து இருவர் சங்கிலியை பறிக்க முயலும் காட்சியானது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள லாஸ்வேகாஸ் நகரில் போலீசார் ஒருவர் குற்றவாளியை கைது செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த குற்றவாளி தரையில் முகம் குப்புற கவிழ்ந்து கிடக்க போலீசார் அவரின் இரு பக்கங்களிலும் கால்களை வைத்து நின்று கைகளுக்கு விலங்கு மாட்டி விட முயற்சி செய்து கொண்டிருந்துள்ளார். இதனை அங்குள்ள மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றனர்.

இதற்கிடையில் மெதுவாக ஒரு இளம்பெண் வந்து கீழே கிடக்கும் குற்றவாளியின் கழுத்தில் இருந்து தங்க சங்கிலியை கழற்ற முயற்சி செய்துள்ளார். குறிப்பாக போலீசார் குற்றவாளியின் கைகளில் விலங்கு மாட்டி விடுவதில் தீவிரமாக ஈடுபட்டு கொண்டிருந்தார். அதனால் அந்த இளம்பெண்ணை கவனிக்கவில்லை. இதனையடுத்து சங்கிலியை அந்த இளம் பெண்ணால் கழற்ற முடியாமல் போனது.

இதற்கு பிறகு அந்த இளம்பெண்ணை தொடர்ந்து இளைஞர் ஒருவர் சங்கிலியை கழற்ற முயற்சி செய்துள்ளார். ஆனால் அவராலும் கழற்ற முடியாமல் போனது. உடனே அந்த இளைஞர் சங்கிலியை பலமாக இழுக்க கீழே கிடக்கும் குற்றவாளியின் தலையும் சேர்ந்து இழுக்கப்பட்டது. இந்த நிலையில் குற்றவாளி அசைவதைக் கண்ட போலீசார் திரும்பி பார்க்க கழுத்திலிருந்த சங்கிலியை அந்த இளைஞர் பறிக்க முயல்வதை கவனித்துள்ளார்.

உடனே அவர் அந்த இளைஞரை சத்தமாக விடு என்று கூறியுள்ளார். மேலும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும் அவரை விடு என்று கூறிய போதும் அந்த இளைஞர் அங்கிருந்து செல்வதாகத் தெரியவில்லை. குறிப்பாக பக்கத்தில் போலீசார் இருக்கிறார் என்பது தெரிந்தும் , வீடியோவில் பதிவாவதை கண்டும் அந்த பெண்ணும் இளைஞரும் துணிச்சலாக சங்கிலியை பறிக்க முயல்வதை கண்டு அனைவரும் வியப்பில் நின்றனர். அதிலும் அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தார்களா என்ற விவரங்கள் குறித்து தெரியவில்லை.

Categories

Tech |