தொழிலாளியை சரமாரியாக வெட்டிய மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அம்பாசமுத்திரம் பகுதியில் இசக்கி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தங்கப்பாண்டி என்ற மகன் உள்ளார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் தங்கபாண்டி இரவில் அப்பகுதி வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தங்கபாண்டியை சில மர்ம நபர்கள் வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த தங்கபாண்டி சம்பவ இடத்திலேயே இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதன்பின் அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் அம்பாசமுத்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற துணை போலீஸ் சூப்பிரண்டு பிரான்சிஸ் மற்றும் காவல்துறையினர் தங்கபாண்டியின் உடலை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தங்கபாண்டியை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்தனர்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி கொலை செய்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.