நடிகர் கார்த்தி பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் மணிரத்னம் இயக்கத்தில் இரு பாகங்களாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த பிரம்மாண்ட படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், ஜெயராம், பார்த்திபன், சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இளவரசி @trishtrashers, நீங்கள் இட்ட ஆணை நிறைவேற்றப்பட்டது.
இளவரசேசசசசச @actor_jayamravi, என் பணியும் முடிந்தது! #PS #PonniyinSelvan
— Karthi (@Karthi_Offl) September 16, 2021
கடந்த சில நாட்களுக்கு முன் ஜெயம் ரவி, விக்ரம் ஆகியோர் இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியதேவன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த கார்த்தி தனது படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் ‘இளவரசி திரிஷா நீங்கள் இட்ட ஆணை நிறைவேற்றப்பட்டது. இளவரசே ஜெயம் ரவி என் பணியும் முடிந்தது’ என பதிவிட்டுள்ளார்.