Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மொத்தம் 135 கோடி மதிப்பு…. தீவிரமாக நடைபெறும் பணி…. கலெக்டர் ஆய்வு….!!

துறைமுகத்தில் நடைபெறுகின்ற விரிவாக்கப் பணிகளை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.

கடலூர் மாவட்டத்திலுள்ள துறைமுகத்தில் மாநில மற்றும் மத்திய அரசின் பங்களிப்பு மூலமாக சாகர்மாலா திட்டத்தின் கீழ் 135 ரூபாய் கோடி மதிப்பீட்டில் விரிவுபடுத்தும் பணி கடந்த 2018-ஆம் வருடம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இந்த பணிகள் தொழில்நுட்ப ஆலோசனை அதிகாரி மேற்பார்வையின் கீழ் நடைபெறுகிறது. இத்திட்டத்தில் துறைமுக விரிவாக்கத் திட்டமாக அலைக்கரை, ஆழமிடுதல் மற்றும் இரண்டு தளங்கள் ஆகிய பணிகள் நடைபெற்றுள்ளது.

இதில் முக்கியத்துவமாக 5.62 மெட்ரிக் டன் வருடமொன்றுக்கு சரக்கு கையாளும் திறன் கொண்டதாக 2 புதிதாக சரக்கு கடல் தலங்கள் அமைந்திருக்கிறது. இதனை அடுத்து துறைமுகம் விரிவாக்கம் செய்வதினால் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துவதன் மூலமாக தொழிற்சாலைகளின் வளர்ச்சி, சரக்கு கையாளும் திறன் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனை தொடர்ந்து திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது பணிகள் அனைத்தும் அடுத்த மாதத்திற்குள் முழுவதுமாக முடிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |