விவசாயிகள் தக்காளிகளை அறுவடை செய்யாத காரணத்தினால் செடியில் அழுகி வருகிறது.
தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் உள்பட அனைத்து சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் இருக்கும் மானாவாரி நிலங்களில் விவசாயிகள் அதிக அளவு தக்காளி சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது அறுவடைக்கு தயாராக இருந்துள்ளனர். அதன்பின் தற்சமயம் தக்காளி வரத்து அதிக அளவாக உள்ளது. இதனால் வியாபாரிகள் விவசாயிகளிடமிருந்து ஒரு கிலோ தக்காளி 5 ரூபாய்க்கு கொள்முதல் செய்து வந்தனர்.
ஆனால் இந்த விலையானது விவசாயிகளுக்கு கட்டுப்படி ஆகவில்லை. இதனையடுத்து விவசாயிகள் தக்காளி அறுவடை செய்யாமல் செடிகளில் அப்படிய வைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து தக்காளி செடிகளில் இருந்து வீணாகி வருவதை காணமுடிகிறது. இது தொடர்பாக விவசாயிகள் கூறும் போது தக்காளி விலை குறைவால் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறோம். அதனால் தக்காளி மதிப்பு கூட்டும் தொழிற்சாலை அமைத்தால் விவசாயிகளுக்கு ஓரளவு விலை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.