பயங்கரவாத அமைப்பினர் மத வழிபாட்டு தலத்தை தாக்கப் போவதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
ஜெர்மனியில் உள்ள Hagen நகரில் இருக்கும் யூத வழிபாட்டு தலத்தைச் சுற்றி போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதில் “யூத வழிபாட்டு தலத்தை புனித நாளான Yom Kippur அன்று பயங்கரவாத அமைப்பினர் தாக்க இருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. இதன் காரணமாக தான் வழிபாட்டு தலத்தைச் சுற்றி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்” என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து அந்த வழிபாட்டு தலத்தில் அனைத்து நிகழ்ச்சிகளும் தடை செய்யப்பட்டன. இந்த சம்பவம் குறித்து Rhine-Westphalia மாநில உள்துறை அமைச்சரான Herbert Reul பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “கடந்த புதன்கிழமை அன்று யூத வழிபாட்டு தலம் மீதான பயங்கரவாதத் தாக்குதலை ஜெர்மன் போலீசார் தடுத்துவிட்டனர்.
குறிப்பாக இந்த தாக்குதலில் தொடர்புடைய 16 வயது சிறுவன் உட்பட மொத்தம் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அதிலும் Yom Kippur புனித நாள் அன்று வழிபாட்டு தலம் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்று எங்களுக்கு மிகவும் நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல் கிடைத்தது” என்று தெரிவித்துள்ளார்.