கும்பம் ராசி அன்பர்களே.! குடும்பத்தில் வாக்குவாதங்கள் இருந்தாலும் சரியாகும்.
இன்று கடந்த கால உழைப்பின் பயனை இப்பொழுது அடைவீர்கள். தொல்லை கொடுத்த எதிரிகள் இப்போது காணாமல் போவார்கள். சமயோஜிதமாக யோசித்து எல்லாவற்றையும் சிறப்பாகச் செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் பணவரவு திருப்திகரமாக இருக்கும். உறவினர் வகையில் உதவிகள் கிடைக்கும். பெண்கள் தாய்வீட்டு அன்பைப் பெறமுடியும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் பெற முடியாமல் போகும். சிலருக்கு எந்த ஒரு விஷயத்தையும் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். சிலருக்கு வீடு மாறக் கூடிய சூழ்நிலையும் பணி மாறக்கூடிய சூழலும் உருவாகும். யாரையும் சந்தேக நோக்கில் பார்க்க வேண்டும். குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் இருந்தாலும் சரியாகும்.
பிரச்சனைகளை சமாளிக்க கூடிய மனப்பக்குவம் இருக்கும். அதனால் தைரியமான முடிவுகளை உங்களால் எடுக்க முடியும். அன்பை வெளிப்படுத்தும் எதையும் சாதித்துக் கொள்வீர்கள். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும். மாணவர்களுக்கு அதிகப்படியான பணிச்சுமை இருக்கும். கல்வியில் கவனம் செலுத்தினால் வெற்றி மேல் வெற்றி சேரும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சனிக்கிழமை என்பதினால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்துவிட்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: தென்மேற்கு அதிர்ஷ்டமான எண்: 5 மற்றும் 9 அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் பச்சை