Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக இராசிக்கு… “வாய்க்கு ருசியாக சாப்பிட்டு மகிழ்வீர்கள்”… திறமையான செயல்பாட்டால் பாராட்டுக்கள் கிடைக்கும்.!!

தெய்வத்தின் அனுகிரகம் கொண்ட கடக ராசி அன்பர்களே..!! இன்று தனவரவு ஏற்பட்டு மகிழும் நாளாக இருக்கும். புதிய பதவிகள், வாகனம், வசதி வாய்ப்புக்கள் எல்லா விதத்திலும் உங்களுக்கு முன்னேற்றத்தைக் கொடுக்கும். வாய்க்கு ருசியான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். இன்று பழைய சிக்கல்கள் தீர்வதில்  மட்டும் கொஞ்சம் தாமதம் பிடிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது நல்லது. திறமையான செயல்பாட்டால் பாராட்டுக்கள் கிடைக்கும். குடும்பத்தில் எதிர் பாராத விருந்தினர் வருகையால் விரும்பத்தகாத வாக்குவாதங்கள் வந்து சேரலாம் பார்த்துக்கொள்ளுங்கள்.

கணவன் மனைவிக்கு இடையே அனுசரித்துச் செல்வது நல்லது. குழந்தைகள் பற்றிய கவலை இன்று உண்டாகும் பார்த்துக்கொள்ளுங்கள். அவர்களுக்காக நீங்கள் பாடுபடுவீர்கள். இன்று நீங்கள் வெளியிடங்களுக்கு செல்லும் போது முக்கியமான பணிகளை  மேற்கொள்ளும் போது பச்சை நிற ஆடையோ அல்லது பச்சை நிறத்தில் கைக்குட்டையோ எடுத்துச் செல்லுங்கள். அனைத்து காரியமும் நல்லபடியாக நடக்கும். அதுபோலவே காலையில் சூரிய நமஸ்காரம் செய்து இன்றைய  நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் பச்சை நிறம்

Categories

Tech |