வாடிப்பட்டி அருகில் உள்ள தனிச்சியம் அய்யன கவுண்டம்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்த செந்தாமரையின் மகன் காசி வயது( 32). இவர் கிரஷர் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 4ஆம் தேதி குடும்பத்தினருடன் சென்னை சென்றுள்ளார். இதனையடுத்து ஊருக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிய காசியின் குடும்பத்தினர், தனது வீட்டின் பீரோவை திறந்து பார்த்தபோது அதில் 10 பவுன் நகை திருட்டு போனது தெரியவந்துள்ளது. இதுகுறித்து காசியின்குடும்பத்தினர் காவல்நிலைத்தில் புகார் அளித்துள்ளனர்.
காவல்துறையினரின் இந்த விசாரனயில் காசியின் வீட்டின் அருகிலுள்ள பக்கத்து வீடான தினமணி என்பவரின் மனைவி ஜெயசித்ரா( 42), நகையை திருடியது தெரிய வந்துள்ளது. ஆனால் அவரிடம் காவல்துறையினர் 6 பவுன் நகையை மட்டுமே மீட்டுள்ளனர். மீதி நகை எங்கே என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.