துணிச்சலுக்கு பெயர் போன துலாம் ராசி அன்பர்களே…!! இன்று நீங்கள் வாக்குவாதங்களை தவிர்ப்பது மிகவும் நல்லது. முக்கியமாக வீட்டில் நீங்கள் பேசும் பொழுது கவனமாக பேசுங்கள். அப்பொழுதுதான் இல்லத்தில் அமைதி நிலவும். காரியங்கள் கைகூட கடினமான உழைப்பு தேவைப்படும். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த ஊடல்கள் நீங்கி நெருக்கமும் அதிகரிக்கும். பிள்ளைகள் பெருமை சேர்ப்பார்கள். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் குடும்பத்தினருடன் கலந்து கொள்வீர்கள். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடித்து பாராட்டுகளையும் பெறுவீர்கள். பணவரவு நல்லபடியாக இருக்கும்.
கொடுக்கல்வாங்கல் விஷயங்களும் நல்லபடியாக இருக்கும். பழைய பிரச்சனைகள் மட்டும் கொஞ்சம் தலை தூக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். யாரிடமும் தயவுசெய்து கோபம் ஏதும் படாதீர்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுது ஆரஞ்சு நிற ஆடை அல்லது ஆரஞ்சு நிறத்தில் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாகவே நடக்கும். அதுபோலவே நீங்கள் காலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரம் மேற்கொண்டு இன்றைய நாளை தொடங்கினால் வெற்றி வாய்ப்புகளையும் நாம் பெற முடியும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் பச்சை நிறம்