Categories
உலக செய்திகள்

சாதாரண மக்களும் செல்லலாம்…. ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தின் சாதனை…. நாசா வெளியிட்ட அறிவிப்பு….!!

விண்வெளிக்கு 4 பேர் கொண்ட குழு தொழிலதிபர் ஜாரிட்  ஐசக் மேன் தலைமையில் பயணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் புளோரிடாவின் கேப் கனாவெரலில் உள்ள நாசாவில் கென்னடி விண்வெளி மையம் ஒன்று அமைந்துள்ளது. அந்த விண்வெளி மையத்தில் இருந்து விண்வெளிக்கு ஸ்பேஸ் எக்ஸின் க்ரூ டிராகன் கேப்சூல் நான்கு சாதாரண மக்களுடன் புறப்பட்டுள்ளது. இதனையடுத்து அமெரிக்க விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ்ஸின் தொழிலதிபர் ஆலன் மஸ்க்கின் நான்கு சாதாரண மக்களை கொண்ட ஒரு குழுவை விண்வெளிக்கு அனுப்பி ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார். அதிலும் குறிப்பாக விண்கலத்தில் பயணம் செய்த நான்கு பேரில் ஒருவர் கூட தொழில்முறை விண்வெளி வீரர்கள் கிடையாது.

இதன் காரணமாக சாதாரண மக்களைக் கூட விண்வெளிக்கு அனுப்பி வைக்க முடியும் என்பதை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தொழிலதிபர் ஆலன் மஸ்கின் நிரூபித்துள்ளார். அதாவது இந்த விண்கலம் பூமியின் மேற்பரப்பிலிருந்து 575 கி. மீ உயரத்தில் புவியின் சுற்றுவட்டப்பாதையில் அடுத்த மூன்று நாட்கள் இயங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த பயணத்திற்கு இன்ஸ்பிரேஷன் – 4 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த விண்வெளி பயணம் கடந்த 2009 ஆம் ஆண்டுக்குப் பிறகு தற்போது முதன் முறையாக மனிதர்கள் இவ்வளவு உயரத்தில் நிலைகொண்டு இருப்பதாக கூறப்படுகிறது.  அதன்பின் இந்த விண்கலமானது பால்கன்-9 ராக்கெட் மூலம் இயக்கப்படுகின்றது.

இந்நிலையில் இந்த விண்வெளிப் பயணத்திற்கு பின்னணியில் பில்லியனர் தொழிலதிபரும், ஷிப்ட் 4 பேமன்ஸ் நிறுவனத்தின் தலைவருமான ஜாரெட் ஐசக்மேனும் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இவர் தலைமையில்தான் மற்ற மூன்று பேரும் இந்த விண்வெளிப் பயணத்தில் பயணம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் இந்த விண்வெளி பயணம் குறித்து நாசா வெளியிட்ட அறிவிப்பில் கூறியதாவது “இந்த விண்கலம் புவியிலிருந்து 575 கி.மீ உயரத்தில் 3 நாட்களுக்கு புவியின் சுற்றுப்பாதையில் இயங்கும். மேலும் இந்த விண்கலம் ஒரு மணிக்கு  27,300 கி. மீ வேகத்தில் இயங்கும். இதனையடுத்து 90 நிமிடங்களுக்கு ஒரு முறை பூமியை முழுவதுமாக சுற்றும்.

இறுதியாக மூன்று நாள் விண்வெளிப் பயணத்திற்குப் பின்னர் இந்த விண்கலம் அட்லாண்டிக் கடலில் பத்திரமாக தரை இறங்கும்” என அறிவித்துள்ளது. எனினும் விண்வெளி பயணத்திற்கு சென்ற நான்கு பேரும் சுமார் 9 மாத காலங்கள் ஸ்பேக்ஸ்எக்ஸ் நிறுவத்தில் பயிற்சி பெற்றவர்கள் என கூறப்படுகிறது. பின்னர் விண்வெளி பயணத்தின் போது புவியீர்ப்பு சக்தி கிடைக்காத இடத்தில் எவ்வாறு பயணிக்க வேண்டும் என்பதற்கான பயிற்சிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து இந்த விண்வெளி பயணம் மூலம் கிடைக்கும்  20 கோடி டாலர்கள் குழந்தைகளுக்கான புற்றுநோய் தடுப்பு ஆராய்ச்சி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இந்த பயணத்தின் சிறப்பு தொகுப்பு ஆவணப்படமாக வெளியிடப்பட்டுள்ளது.

Categories

Tech |