மீனம் ராசி அன்பர்களே.! எல்லாம் சுமுகமாக இருக்கும்.
இன்று புதிய உத்தியோக வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். பதவி உயர்வு சம்பள உயர்வு போன்ற நல்ல விஷயங்களை என்று நீங்கள் எதிர்பார்க்க முடியும். எல்லா வகையிலும் முன்னேற்றம் காணமுடியும். வாழ்க்கையில் இனிய மாற்றங்களை நீங்களே ஏற்படுத்திக் கொள்ளமுடியும். உங்களுடைய எதிர்பார்ப்புகள் எல்லாம் பூர்த்தியாகும். புகழ் ஓங்கி இருக்கும். எந்த ஒரு செயலையும் நீங்கள் தைரியமாக செய்து பாராட்டை பெறுவீர்கள். வீண் அலைச்சலை குறைத்துக் கொள்ள வேண்டும். நல்லவர்களுடன் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். கெட்ட சகவாசத்தை இன்றுடன் விட்டுவிட வேண்டும். குடும்ப பிரச்னைகள் கட்டுக்குள் இருக்கும். பணவரவு இருக்கின்றது. அரசாங்கம் மூலம் லாபம் கிடைக்கும். நீண்ட தூரப் பயணங்களால் சாதகமான பலன் இருக்கும்.
உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனை இருக்காது. எல்லாம் சுமுகமாக இருக்கும். எதையும் சாதிக்க கூடிய வல்லமை இருக்கும். இன்று மாணவர்களுக்கு எதிர்பாராத திருப்பங்கள் இருக்கும். கல்வி மீது அக்கறை இருக்கும். கல்வியை சாதிக்க கூடிய வல்லமை இருக்கும். மேற்கண்ட முயற்சியில் நல்ல பலன் இருக்கும். உங்களுடைய திட்டங்கள் யாவும் பலிக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது இளம் பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளம் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு அதிர்ஷ்டமான எண்: 3 மற்றும் 9 அதிர்ஷ்டமான நிறம்: பச்சை மற்றும் மஞ்சள்