பெண்களின் உரிமைகள் குறித்து தலீபான்களை விமர்சிக்க வேண்டாம் என பாகிஸ்தான் நாட்டு பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி அந்நாட்டை கண்ணிமைக்கும் நேரத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி கைப்பற்றியுள்ளனர். அதிலிருந்து ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இதனால் ஆப்கானிஸ்தான் முழுவதும் தலீபான்களின் ஆட்சி பிடியில் சிக்கியுள்ளது. இதனைத்தொடர்ந்து தலீபான்கள் ஆப்கானிஸ்தானில் புதிய அரசாங்கத்தை உருவாக்கியுள்ளனர்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் அமைத்த புதிய அரசாங்கத்தில் பெண்களின் உரிமை குறித்து அவர்களை விமர்சிக்க வேண்டாம் என பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் இம்ரான்கான் வலியுறுத்தியுள்ளார். மேலும் புதிதாக ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ள தலீபான்களின் அமைப்பினருக்கு நிர்வாகத்தை ஒழுங்குபடுத்த அவகாசம் கொடுக்க வேண்டும் எனவும் பாகிஸ்தான் பிரதமர் கூறியுள்ளார்.