Categories
அரசியல்

மரண ஓலத்தால் அல்ல…. போர் குணத்தால் நீட்டை எதிர்ப்போம்…. ஜோதிமணி ஆவேசம்…!!!

கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியின் உள்ளூர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் மாற்றுதிறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜோதிமணி, ஒரு தேர்வு மாணவர்களின் வாழ்க்கையை நிர்ணயிக்காது. மாணவர்களுக்கு தகுதி இருக்கும் போது அதை நிறைவேற்ற வேண்டியது மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பு. நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த தீர்மானமானது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். ஏற்கனவே தமிழகத்தில் 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதும் பட்சத்தில் மீண்டும் நீட் தேர்வு போன்ற தேர்வு தேவையில்லை. மரண ஓலத்தால் நீட்தேர்வை எதிர்க்க முடியாது. போர் குணத்தால் மட்டுமே எதிர்க்க முடியும். அதற்கு நாங்கள் துணை நிற்போம். நீட் தேர்வு தமிழக மாணவர்கள் மீது திணிக்கப்பட்டுள்ள அநீதி. அதற்கு எதிராக போர்க்குணத்துடன் எதிர்கொள்வோம் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |