Categories
அரசியல்

அங்கே தொட்டால்…. போராட்டம் வெடிக்கும்…. எச்சரிக்கும் மாஜி அமைச்சர்…!!!

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் பாமக கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அவர், உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிடுவது குறித்து அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் பாலு உரிய விளக்கம் அளித்து, நாங்களும் கருத்து தெரிவித்தோம் என்பதால் இதை பெரிதாக்க விரும்பவில்லை. ஒவ்வொரு கட்சிக்கும் தனிப்பட்ட கொள்கை இருக்கிறது என்று கூறினார்.

மேலும் முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், இது முழுக்க முழுக்க பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்கிறது. உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவை இயங்கவிடாமல் கட்சியை உடைக்க வேண்டுமென்று ஆளுங்கட்சியினர் செயல்படுகின்றனர்.

அது நிறைவேறாது. இதனையடுத்து ஓமந்தூர் அரசு மருத்துவமனை கல்வெட்டு புதுப்பிக்கப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றியதால் கொரோனா காலத்தில் பல உயிர்கள் காக்கப்பட்டன. அந்த மருத்துவமனையை அவரது தந்தை புகழுக்காக மாற்றினால் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்த அதிமுக தயங்காது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |