Categories
உலக செய்திகள்

திணறி வரும் ஏழை நாடுகள்…. உலகளாவிய திட்டத்திற்கு முன்னுரிமை…. தகவல் வெளியிட்ட ஐரோப்பிய யூனியன்….!!

உலகளவில் செலுத்தப்பட்டு வரும் கொரோனா குறித்த தடுப்பூசியை ஏழை நாடுகள் மிகக் குறைந்த அளவிலேயே தங்கள் நாட்டு மக்களுக்கு செலுத்தியுள்ளதால் ஐரோப்பிய ஆணையம் அதிரடியான முடிவு ஒன்றை எடுத்துள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவிற்கு எதிராக அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டு மக்களுக்கு கொரோனா குறித்த தடுப்பூசியை தீவிரமாக செலுத்தி வருகிறது. ஆனால் ஏழை நாடுகள் 1 சதவீதம் கூட தங்கள் நாட்டு மக்களுக்கு கொரோனா குறித்து தடுப்பூசியை செலுத்தாமல் திணறி வருகிறது. இதனால் ஐரோப்பிய ஆணையம் அதிரடியான முடிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதாவது உலகளவில் செலுத்தப்படும் கொரோனா தடுப்பூசி திட்டத்திற்கு முதலுரிமை கொடுக்கும் பொருட்டு வரவிருக்கும் ஆண்டின் ஜூன் மாதத்திற்குள் சுமார் 20 கோடி கொரோனா குறித்த தடுப்பூசி டோஸ்கள் ஆப்பிரிக்க நாடுகளுக்கு வழங்குவதற்கு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.

Categories

Tech |