Categories
உலக செய்திகள்

கிட்டத்தட்ட 20 தாக்குதல்கள்…. குழந்தைகளை குறிவைக்கும் தீவிரவாதிகள்…. அச்சத்தினால் பெற்றோர்கள் செய்த செயல்….!!

ஆப்பிரிக்க நாடு ஒன்றில் தீவிரவாத அமைப்பினர்கள் குழந்தைகள் பயிலும் பள்ளிகளில் மட்டுமே சுமார் 20 தாக்குதல்களை நடத்தியுள்ளதாக யுனிசெஃப் தகவல் வெளியிட்டுள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றாக நைஜீரியாவும் திகழ்கிறது. இந்த நைஜீரிய நாட்டிலுள்ள பள்ளிகளில் பயிலும் குழந்தைகளை தீவிரவாத அமைப்பினர்கள் ஆயுதத்தைக் காட்டி மிரட்டி கடத்தி செல்கிறார்கள்.

ஆகையினால் பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப விரும்பாததால் தற்போது நடந்து வரும் ஆண்டில் மட்டுமே சுமார் 10 லட்சம் குழந்தைகள் தங்களது படிப்பை பாதியிலேயே நிறுத்தியுள்ளதாக யுனிசெப் பகிரங்க தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதோடு மட்டுமின்றி 2021 ஆம் ஆண்டில் தீவிரவாத அமைப்பினர்கள் நைஜீரியாவிலுள்ள குழந்தைகள் பயிலும் பள்ளிகளில் சுமார் 20 அதிபயங்கர தாக்குதலை நடத்தியுள்ளதன் மூலம் 1400 அப்பாவி குழந்தைகளையும் கடத்தி சென்றுள்ளதாக யுனிசெப் தெரிவித்துள்ளது.

Categories

Tech |