ஊராட்சி ஒன்றியங்களில் முதல் கட்ட தேர்தல் நடக்க இருக்கிறதால் வேட்பு மனு தாக்கல் செய்ய வாலிபர் ஒருவர் முருகர் வேடம் அணிந்து வந்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் வருகின்ற அக்டோபர் மாதம் 6-ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் நடக்கின்றது. இந்நிலையில் இதற்கான வேட்பு மனு தொடங்கப்பட்டுள்ளது. அதன்பின் ஆசிரியர் நகரில் இருக்கும் ஒன்றிய அலுவலகத்தில் முருகன் வேடம் அணிந்து கையில் வேலுடன் 22 வயதுமிக்க வாலிபர் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இதையடுத்து அவர் உதவி அலுவலரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து அலுவலகத்தில் இருந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அவரை வியப்புடன் பார்த்துள்ளனர்.