குழந்தை திருமணம் நடக்க இருந்ததை மாவட்ட கலெக்டர் தடுத்து நிறுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நல்லூர் கிராமத்தில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்நிலையில் சிறுமிக்கு திருமணம் நடக்க இருப்பதாக மாவட்ட கலெக்டருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் கிராமத்திற்கு சென்று நடக்க இருக்கும் சிறுமியின் குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்துமாறு கலெக்டர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து மாவட்ட கலெக்டர் கூறும் போது, இம்மாவட்டத்தில் உள்ள குழந்தை திருமணங்களை ஏற்பாடு செய்யும் உறவினர்கள், திருமண மண்டப உரிமையாளர்கள், பெற்றோர்கள், நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அதிகபட்ச தண்டனையாக இரண்டு வருடங்கள் சிறை தண்டனை மற்றும் ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.