Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

நள்ளிரவில்… ஏடிஎம் இயந்திரத்தில் ரூ 4,00,000 கொள்ளை… 2 தனிப்படைகள் அமைப்பு…!!

பெருங்களத்தூரில் ஜிஆர்டி கல்லூரி அருகேயுள்ள ஆக்ஸிஸ் வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளை அடித்த மர்ம நபர்களை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருத்தணிக்கு அருகாமையில் 5 கிலோமீட்டர் தொலைவில் ஆக்ஸிஸ் பேங்க்குக்கு  சொந்தமான ஏடிஎம் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏடிஎமில் சிசிடி கேமரா கிடையாது,  பாதுகாவலர் யாருமே இல்லை.. இந்த நிலையில் நேற்று இரவு இந்த இயந்திரத்தை வெல்டிங் இயந்திரம் கொண்டு உடைத்து மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.. கடந்த 15ஆம் தேதி ஏடிஎம் இயந்திரத்தில் 8.50 லட்சம் நிரப்பப்பட்டு இருந்ததாக வங்கி தரப்பில் கூறப்பட்டுள்ளது.. ஏடிஎம்-மில் கொள்ளை போன பணம் 4 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என காவல் துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது..

தேசிய நெடுஞ்சாலையில் அதிக வாகனங்கள் செல்ல கூடிய பகுதியில்தான் இந்த இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. கொள்ளையர்கள் கதவை பூட்டிக்கொண்டு உள்ளே இயந்திரம் வைத்து வெல்டிங் இயந்திரம் கொண்டு உடைத்து கொள்ளையடித்துள்ளனர்.. கொள்ளையர்கள் யார்? எவ்வளவு கொள்ளை அடித்தார்கள்? என்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க ராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர் தீபா சத்யன் தலைமையிலும், காவல் துணை கண்காணிப்பாளர் புகழேந்தி கணேசன் தலைமையிலும் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Categories

Tech |