விருச்சிகம் ராசி அன்பர்களே.! மனதை ஆசுவாசப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இன்றைய நாள் வாக்குறுதிகளுக்கு மாறாக செயல்படும். சொன்ன சொல்லை நிறைவேற்றி கொடுக்க மாட்டார்கள். அது உங்களுக்கு கோபத்தை ஏற்படுத்தும். தொழிலில் லாபம் சுமாராக கிடைக்கும். பணியாளர்கள் பணிச்சுமையை சந்திக்க நேரிடும். அறிமுகம் இல்லாதவரிடம் நெருக்கம் வேண்டாம். கொஞ்சம் விட்டு பிடிக்க வேண்டும். உத்தியோகத்தில் தேவையற்ற இடமாற்றங்கள் சந்திக்க வேண்டியிருக்கும். பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும். பயணங்களில் கூடுதல் பொறுப்புகள் ஏற்படும். அதிக நேரம் உழைக்க வேண்டிய சூழல் இருக்கும். இதனால் தான் உடல் கொஞ்சம் சோர்வடைய கூடும். தேவையற்ற பயணங்களை குறைத்துக் கொள்ள வேண்டும். அலைச்சல் டென்ஷனை குறைத்துக் கொள்ள வேண்டும். கோபமில்லாமல் நடந்து கொள்ள வேண்டும். மனதை ஆசுவாசப்படுத்திக் கொள்ள வேண்டும்.
யாரைப் பற்றியும் விமர்சனம் செய்ய வேண்டாம். தங்குதடையின்றி உங்களுடைய பணிகளை நீங்கள் செய்ய வேண்டும். கூடுதல் முயற்சி எடுத்து முன்னேறிச் செல்ல வேண்டும். எல்லாம் உங்களுக்கு நன்மையாக நடக்கும். எந்த ஒரு பணியை கொடுத்தாலும் உங்களுக்கு சிறப்பாக செய்யமுடியும். திட்டங்கள் சிறப்பாக இருக்கும். வசீகரமான தோற்றமும் இருக்கும். திருமண தடைகள் விலகி செல்லும். எல்லா விதமான முன்னேற்றமும் இருக்கும். மாணவர்களுக்கு தைரியம் கூடும். கல்வியில் முன்னேற்றம் இருக்கும். மாணவர்கள் சிறப்பாக எதையும் செய்ய முடியும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சனிக்கிழமை என்பதினால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்துவிட்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 9 அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள்