Categories
உலக செய்திகள்

உணவில் கட்டை விரல்…. அதிர்ச்சியடைந்த பெண்…. உத்தரவிட்ட பொலிவிய அரசு….!!

உணவில் கட்டை விரலை வைத்து பரிமாறிய உணவகத்திற்கு பொலிவிய அரசு அபராதம் விதித்துள்ளது.

பொலிவியா நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் சாப்பிடுவதற்காக உணவகத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவர் பர்கரை ஆர்டர்  செய்துள்ளார். இதனை அடுத்து அவர் பர்கரை சாப்பிடுவதற்காக வாயில் வைத்த பொழுது ஏதோ தட்டுபட்டுள்ளது. உடனே அவர் அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். ஏனெனில் அதில் இருந்தது ஒரு மனிதனின் கட்டைவிரல் ஆகும். இதனை அந்த பெண் அங்கிருந்த உணவக ஊழியரை அழைத்து நடந்ததை கூறியுள்ளார். ஆனால் அவரோ “தவறு நடந்துவிட்டது. அதற்காக மன்னித்துவிடுங்கள்.

இதுபோன்று நடந்ததில்லை” என்று அந்த பெண்ணிடம் கூறிவிட்டு அங்கிருந்து சென்று சாதாரணமாக மற்றவர்களுக்கு உணவு பரிமாறி கொண்டிருந்தார். அதன் பின்பு தான் அந்த உணவகத்தின் ஊழியர் ஒருவருக்கு இறைச்சியை  வெட்டும் பொழுது கட்டைவிரல் வெட்டப்பட்டுள்ளது என்ற தகவல் அப்பெண்ணிற்கு  தெரியவந்துள்ளது. இந்த செய்தியை அந்த பெண் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதனை 60 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர். அதன் பின்பு தான் அந்த உணவகத்தை மூடி அபராதம் விதிக்க பொலிவிய அரசு உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |