திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள சேரன் குளம் ஆள்காட்டியம்மன் கோவிலில் நேற்று காலையில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதில் தர்மபுரம் ஆதினம் வருகை தந்து நேற்று முன்தினம் அருள் வழங்கினார். இதனை அடுத்து நேற்று நடந்த அரசியல் நிகழ்வில் பங்கேற்க முன்னாள் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ், சசிகலாவின் சகோதரர் திவாகரன், மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் வருகை புரிந்தனர்.
இந்நிலையில் அம்மனுக்கு அபிஷேகம் செய்யும் போது சசிகலாவின் சகோதரர் திவாகரன் மற்றும் முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ஆகிய இருவரும் சேர்ந்து சுவாமி தரிசனம் செய்தனர்.இருவரும் ஒருவர் தோள் மேல் ஒருவர் கை போட்டு பிரகாரத்தை வலம் வந்தனர்.இது பார்ப்பவர்களை ஆடு பகை குட்டி உறவு என்று தோன்றும் அளவிற்கு இருந்தது. மன்னார்குடி தான் அதிமுகவின் அதிகார மையமாக இருந்தது.ஆனால் ஜெயலலிதாவின் மரணத்துக்கு பிறகு மன்னார்குடி குடும்பம் ஓரம் கட்டப்பட்டது.
இந்நிலையில் இவர்களின் சந்திப்பு பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது அதுமட்டுமல்லாமல் சசிகலா சிறையில் இருந்து விடுதலை ஆகி அதிமுகவில் இணைய சசிகலா ஆசைபடும் நிலையில் கோவிலில் நடந்த சந்திப்பு மற்றும் கொடநாடு பிரச்சனையின் முடிவு ஆகிய இரண்டிற்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ என்று சந்தேகம் எழுந்துள்ளது .இவர்கள் இரண்டு பேரும் தோளோடு தோள் கை போட்டு கோவிலில் சாமி தரிசனம் செய்த சம்பவம் அதிமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.