ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் உருவாகியுள்ள சிவகுமாரின் சபதம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும், இயக்குனராகவும் அசத்தி வருபவர் ஹிப்ஹாப் ஆதி. இவர் நடிப்பில் வெளியான மீசைய முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் நடிப்பில் அன்பறிவு, சிவகுமாரின் சபதம் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இந்த இரண்டு படங்களையும் சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
.@hiphoptamizha’s #SivakumarinSabadham coming to entertain you in theatres this September 30th. #IndieRebels @thinkmusicindia @DoneChannel1 pic.twitter.com/7rkZBXr9mM
— Sathya Jyothi Films (@SathyaJyothi) September 16, 2021
இதில் சிவகுமாரின் சபதம் படத்தை ஹிப்ஹாப் ஆதியே இயக்கி நடித்துள்ளார். இந்த படத்தில் மாதுரி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் சிவகுமாரின் சபதம் படம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.