7-ம் வகுப்பு படிக்கும் மாணவன் குட்டையில் முழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள எர்ணாவூர் சுனாமி குடியிருப்பு பகுதியில் ஜீவா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 7ம் வகுப்பு படிக்கும் ரஞ்சன்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனது தோழர்களுடன் எர்ணாவூர் முருகன் கோவில் அருகேயுள்ள குட்டையில் மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது கால்தவறி குட்டைக்குள் விழுந்த ரஞ்சன்குமாரை காப்பாற்றுவதற்காக தோழர்கள் அக்கம் பக்கத்தினரை அழைத்துள்ளனர்.
ஆனால் ரஞ்சன்குமாரை காப்பாற்ற இயலாததால் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 4 மணி நேர கடும் போராட்டத்திற்கு பின் ரஞ்சன் குமாரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் காவல்துறையினர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.