Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் 19 ஆம் தேதி முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம்!!

தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் 19 ஆம் தேதி முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது  என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வரும் ஞாயிறு முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. இன்றும், நாளையும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. ஏற்கனவே கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்றைய தினம் முதல் கனமழை பெய்து வருகிறது..

இந்நிலையில் வரும் 19ஆம் தேதி முதல் அரியலூர், பெரம்பலூர், கடலூர் சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று தென்மேற்கு பருவக்காற்று காரணமாகவும், நாளை முதல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனத்தின் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

Categories

Tech |