Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மொத்தம் 5000 லிட்டர்…. தோட்டத்தில் நின்ற டேங்கர் லாரி…. போலீஸ் நடவடிக்கை…!!

 5000 லிட்டர் கலப்பட டீசலை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

சேலம் மாவட்டத்திலுள்ள சங்ககிரி ஒருங்காமலை மேட்டங்காடு பகுதியில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.  அப்பகுதியில் வசிக்கும் பழனிவேல் என்பவரது தோட்டத்தில் காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அப்போது அங்கிருந்த டேங்கர் லாரியில் 5000 லிட்டர் கலப்பட டீசல் இருந்ததை காவல்துறையினர்  கண்டுபிடித்துள்ளனர்.

இதனையடுத்து காவல்துறையினர் கலப்பட டீசலுடன் அந்த லாரியை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் லாரி உதவியாளரான ரமேஷ் என்பவரை கைது செய்துள்ளனர். அதோடு தப்பி ஓடிய லாரி உரிமையாளரான கண்ணன் என்பவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |