லாரி குழிக்குள் இறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்திலிருந்து சிமெண்ட் பாரம் ஏற்றிய லாரி மைசூர் நோக்கி புறப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்திலுள்ள மல்லிபாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது தீடிரென லாரி சாலையோரம் தோண்டபட்டிருந்த குழிக்குள் இறங்கி விட்டது.
இதனையடுத்து அந்த குழியிலிருந்து வெளியே வரமுடியாத அளவிற்கு லாரியின் முன்பக்க டயர் அதில் சிக்கிக்கொண்டுள்ளது. இதனால் லாரி ஒருபக்கமாக சாய்ந்த நிலையில் நின்றுவிட்டது. இதனைப் பார்த்ததும் அக்கம்பக்கத்தினர் லாரி ஓட்டுனரை பத்திரமாக மீட்டதால் அவர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பிவிட்டார்.