Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஒரே சதம் …… இரண்டு சாதனை ….. ரோஹித் புதிய ரெக்கார்டு …..!!

இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இரண்டு சாதனைகளை புரிந்துள்ளார்.

இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ராஞ்சியில் இன்று தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் அதிர்ச்சியளித்தனர். ரபாடா பந்துவீச்சில் மயாங்க் அகர்வால் 10, புஜாரா 0 என அடுத்தடுத்து வெளியேறினர்.

Image result for gavaskar

அவர்களைத் தொடர்ந்து கேப்டன் விராட் கோலியும் 12 ரன்களில் அறிமுக பந்துவீச்சாளர் அன்ரிச் நோர்ட்ஜின் பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின் ரோஹித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்த அஜிங்கியா ரஹானே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் மறுபுறம் ரோஹித் சர்மா அதிரடி கலந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி டெஸ்ட் போட்டிகளில் தனது ஆறாவது சதத்தை பூர்த்தி செய்தார்.

இதன்மூலம் ஒரே தொடரில் மூன்று சதங்கள் விளாசிய இரண்டாவது இந்திய தொடக்க ஆட்டக்காரர் என்ற சாதனைப்பட்டியலிலும் அவர் இணைந்தார். முன்னதாக சுனில் கவாஸ்கர் இச்சாதனையை நிகழ்த்தியிருந்தார். அதுமட்டுமல்லாது இப்போட்டியில் நான்கு சிக்சர்கள் விளாசிய ரோஹித் நடப்பு டெஸ்ட் தொடரில் மொத்தம் 16 சிக்சர்களை பறக்கவிட்டுள்ளார். இதுவே ஒரு டெஸ்ட் தொடரில் ஒரு வீரர் அடித்த அதிபட்ச சிக்சர்களாகும். முன்னதாக வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஹெட்மயர் 15 சிக்சர்கள் விளாசியதே அதிகபட்சமாக இருந்தது.

இப்போட்டி மழைக்காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் இந்திய அணி ஆட்டநேர முடிவில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 224 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் சர்மா 117 ரன்களுடனும், ரஹானே 83 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

Categories

Tech |