Categories
சினிமா தமிழ் சினிமா

பிரியங்காவுக்கு பதில்… சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஷிவாங்கி… வெளியான புதிய தகவல்…!!!

பிரியங்கா தொகுத்து வழங்கி வந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை இனி சிவாங்கி தான் தொகுத்து வழங்க போகிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

பல வருடங்களாக விஜய் தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருக்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஹிட் நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது இந்நிகழ்ச்சியில் பெரியவர்களுக்கான போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்நிகழ்ச்சியில் இந்த சீசனில் யார் ஜெயிக்க போகிறார்கள் என்ற கருத்துக் கணிப்புகளும் நடந்து வருகிறது.

இதற்கிடையில் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த பிரபல தொகுப்பாளினி பிரியங்கா பிக்பாஸ்  நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார் என்ற தகவலும் பரவி வருகிறது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் தொகுப்பாளினி பிரியங்கா தொகுத்து வழங்கி வந்த மற்றொரு நிகழ்ச்சியான ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியை தற்போது மா.கா.பா ஆனந்த் தொகுத்து வழங்கி வருகிறார்.

இதன்மூலம் பிரியங்கா பிக்பாஸ்5ல் பங்கேற்கிறார் என்ற செய்தி உறுதியாகிறது. மேலும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அவர் தொகுத்து வழங்கி வந்த இடத்தில் தற்போது குக் வித் கோமாளி பிரபலம் சிவாங்கி தொகுத்து வழங்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஷிவாங்கி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ANCHOR SIVAANGI என்ற ஒரு பதிவையும் வெளியிட்டுள்ளார்.

Categories

Tech |