தனுசு ராசி அன்பர்களே.! கையில் காசு பணம் புரளும்.
இன்று பிறரது அதிருப்திக்கு ஆளாக நடந்து கொள்ள வேண்டும். யார் எது சொன்னாலும் என்ன சொன்னாலும் அதனை பற்றி பொருட்படுத்த வேண்டாம். சில எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். தொழில் வியாபாரம் சராசரி அளவில் இருக்கும். சேமிப்பு பணம் கண்டிப்பாக செலவுக்கு பயன்படும். குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்தாலும் சரியாகிவிடும். வெளியூர் பயணத்தில் திடீர் மாற்றங்கள் ஏற்படும். ஒவ்வாத உணவு வகைகளை தயவு செய்து உண்ண வேண்டாம். எந்த ஒரு பணியை செய்தாலும் அதனை சிறப்பாக செய்து முடிக்க முடியாத சூழல் உருவாகும். மேலதிகாரியிடம் பணிவாக நடந்து கொள்ள வேண்டும். வார்த்தைகளுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும். கருத்துகளை பரிமாறும்போது கனிவாக இருக்க வேண்டும். ஆதரவற்றவர்களுக்கு ஆதரவாக இருப்பீர்கள். மதிப்புமிக்க நபர்களின் நட்பு கிடைக்கும். சமுதாயத்தில் நல்ல பெயர் இருக்கும். அரசியல்வாதிகளின் தொடர்பு இருக்கும். தொழில் ரீதியாக சில முக்கிய பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும்.
கையில் காசு பணம் புரளும். பெரிய பிரச்சனைகள் எதுவும் இருக்காது. இன்பம் பொங்கும். குடும்பப் பெண்களுக்கு சுயமான சிந்தனை வெளிப்படும். நல்லது கெட்டதுகளை ஆராய்ந்து பார்த்து முடிவெடுக்க கூடிய ஆற்றல் இருக்கும். பெண்கள் எந்த ஒரு விஷயத்தையும் தெளிவுபடுத்திக் கொண்டு பேச வேண்டும். மாணவர்களுக்கு பொறுப்புகள் கூடும். குடும்பப் பொறுப்புகள் வந்து சேரும். காதலில் உள்ளவர்களுக்கு சின்ன விஷயத்திற்கு கூட கோபப்பட நேரிடும். காதலில் கவனமாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் காதல் கைகூடும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது அடர் நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும். அடர் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சனிக்கிழமை என்பதினால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்துவிட்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு அதிர்ஷ்டமான எண்: 4 மற்றும் 6 அதிர்ஷ்டமான நிறம்: அடர் நீலம் மற்றும் சிவப்பு