Categories
மாநில செய்திகள்

BIG BREAKING : உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிகளை ஏலம் விட கூடாது – தேர்தல் ஆணையம் அதிரடி!!

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிகளை ஏலம் விட கூடாது என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 9 மாவட்டங்களுக்கு நடைபெற இருக்கிறது இரண்டு கட்டமாக நடைபெற இருக்கிறது.. முதல்கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 6ம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 9ஆம் தேதி நடைபெறும். ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு, அதற்கான பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில்தான் அந்த உள்ளாட்சி பதவி ஏலம் விடப்படுவதற்கான சூழல் இருப்பதாகவும் இதனை அறிந்து மாநில தேர்தல் ஆணையம் ஓர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

அதாவது, மக்களாட்சி முறையில் தான் வாக்காளர் அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டும். ஊரக உள்ளாட்சி பதவிகளை ஏலம் விடக்கூடாது. உள்ளாட்சி பதவிகளை ஏலம் விடுவது ஜனநாயகத்திற்கு ஊறு விளைவிக்கும். உள்ளாட்சி பதவிகளை ஏலம் விடுவது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிகளை ஏலம் விட கூடாது.

தேர்தல் மூலம் மட்டுமே உள்ளாட்சி பதவிகளை நிரப்ப வேண்டும் இதற்கு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். உள்ளாட்சி பதவிகளை ஏலம் விடுவார் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

 

Categories

Tech |