Categories
மாநில செய்திகள்

பெற்றோர்களே…. “செல்வ மகள் சேமிப்பு திட்டம்”…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் மக்கள் பயன்பெறும் படி தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில், பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக பல்வேறு சமூக பாதுகாப்பு திட்டங்களை அரசு செயல்படுத்தி கொண்டு வருகின்றது. அவ்வகையில் இந்திய அஞ்சல் துறையின் சார்பாக செல்வமகள் சேமிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு பெண் குழந்தைகள் என்ற அடிப்படையில் 10 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன் பெற முடியும்.

இந்த கணக்கை புதிதாக தொடங்குவதற்கு ரூ.250 மட்டுமே செலுத்தினால் போதும். மேலும் வருடத்திற்கு குறைந்தபட்சம் 250 ரூபாய், அதிகபட்சம் 1.50 லட்சம் ரூபாய் வரை வைப்புத்தொகை செலுத்தலாம். இதனால் ஆண்டுக்கு 7.6% வட்டி பெற முடியும். இந்தத் திட்டத்தின் முதிர்வு தொகையில் 50 சதவீதம் வைப்பு தொகையை பெண்குழந்தைகளின் மேற்படிப்புக்காக பெற்றுக் கொள்ளலாம்.

மீதமுள்ள தொகையை உங்கள் பெண் குழந்தையின் திருமணத்தின் போது அல்லது இருபத்தொரு வயது நிறைவடையும் போது பெற்றுக்கொள்ள முடியும். இதற்கு வரிவிலக்கு உண்டு. இந்தத் திட்டத்தில் சேர விரும்பும் பெற்றோர்களின் வசதிக்காக சென்னை பொது அஞ்சல் நிலையத்தில் சிறப்பு கவுண்டர் திறக்கப்பட்டுள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |