Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் கேட்ட பயங்கர சத்தம்…. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்…. போலீஸ் விசாரணை…!!

வீட்டின் முன்பு 2 வாலிபர்கள் பெட்ரோல் குண்டை வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தொண்டி பகுதியில் பழனியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். தற்போது பழனியப்பன் விடுமுறை காரணமாக சொந்த ஊருக்கு சென்றுள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் பாட்டில் ஒன்று விழுந்து உடையும் சத்தம் கேட்டதால் அதிர்ச்சி அடைந்த பழனியப்பன் வெளியே சென்று பார்த்துள்ளார். அப்போது 2 வாலிபர்கள் அங்கிருந்து ஓடி சென்றுள்ளனர்.

இதனையடுத்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் காட்சிகளை பழனியப்பன் ஆய்வு செய்தபோது 2 வாலிபர்கள் வீட்டின் முன்பு நின்று பெட்ரோல் குண்டை வீசி சென்றது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பழனியப்பன் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பெட்ரோல் குண்டை வீசி சென்ற 2 வாலிபர்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |