Categories
உலக செய்திகள்

இறுதி ஊர்வலத்தில்…. துப்பாக்கிச் சூடு…. 8 பேர் உயிரிழப்பு….!!

இறுதி ஊர்வலத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்குவா மாகாணத்தில் லோயர் தீர் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் இறுதி ஊர்வலம் ஓன்று நடந்துள்ளது. இந்த இறுதி ஊர்வலத்தில் திடீரென துப்பாக்கி சூடு நடத்ததால் 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 15 பேர் படுகாயம் அடைந்ததால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

அதிலும் 10 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில்  இரு குழுக்களிடையே நிலத்தகராறில் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக துப்பாக்கிச் சூடு  நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |